தமிழ் மொழி விரைவில் நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக வரும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று பேசிய அவர், தமிழ் இதுவரை உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக இல்லை. ஆனால் விரைவில் நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.