வேலூர் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த மேல்விழாச்சூர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி கோவிந்தராஜ் என்பவரின் 13 வயது மகள் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானதும், அவர் தீவிர பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், மேல்விழாச்சூர் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளால் டெங்கு கொசுக்கள் பரவுவதாகவும், அரசு அதிகாரிகள் எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.