ஜம்மு காஷ்மீரின் தால் ஏரியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
ஸ்ரீநகரில் கடந்த சில நாட்களாக பெய்துவந்த கனமழையின் காரணமாக தால் ஏரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. மேலும், கடும் குளிர் காரணமாக ஏரி நீர் ஐஸ் கட்டிகளாக மாறி காட்சியளித்தது.
இதையடுத்து, ஸ்ரீநகரில் மழை குறைந்து இயல்வு நிலை திரும்பியதால் தால் ஏரிக்கு திரளான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். படகில் சவாரி செய்தும், ஏரியின் அழகை ரசித்தும் விடுமுறையை கொண்டாடி வருகின்றனர்.