ஆந்திர மாநிலம் கூடூரில் கடந்த 20 நாட்களில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட பசு மாடுகள் கடத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கார் ஒன்றில் வந்த மர்ம நபர்கள் பசு மாடு ஒன்றை கடத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இந்த காட்சிகளை கொண்டு கடத்தல்காரர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.