டெல்லியில் வடிகால் தூர்வாரும் பணிகளின் நிலை பற்றி சட்டமன்ற உறுப்பினர்களிடம் எழுத்துப்பூர்வமாகக் கேட்கவுள்ளதாக முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
சுனேஹ்ரி புல் வடிகால் பணிகளை முதலமைச்சர் ரேகா குப்தா, பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா, துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
அப்போது, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பணிகள் குறித்து ரேகா குப்தா கேட்டறிந்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரேகா குப்தா, முந்தைய அரசாங்கம் வடிகால்களை கண்டுகொள்ளவே இல்லை என குற்றம் சாட்டினார்.