பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 போட்டியில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
தொடர்ந்து களமிறங்கிய நியூஸிலாந்து அணி அபாரமாக விளையாடி 10 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது.