எதிர்க்கட்சிகளை கண்டு தமிழக அரசு அஞ்சுவதால்தான், போராட்டக்களத்திற்கு செல்லவிடாமல் வீட்டிலேயே பாஜகவினர் கைது செய்யப்படுவதாக அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் பேசிய அவர், பாஜக தலைவர்கள் மட்டுமின்றி நிர்வாகிகளை கூட போராட்டத்திற்குச் செல்வதற்கு முன்பே கைது செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.
புதிய நடைமுறையை திமுக அரசு மேற்கொண்டு வருவதாகக் கூறிய அவர், குற்றச்சாட்டுகளை கண்டு திமுக அரசு பயந்து நடுங்குகிறது எனவும் குறிப்பிட்டார்.
பொதுவாகப் போராட்டங்களில் ஈடுபடும்போது தான் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்த அவர், தற்போது போராட செல்லும் முன்பே பாஜகவினர் கைது செய்யப்படுவதாக வானதி சீனிவாசன் கூறினார்.