மதுபான ஊழலால் டெல்லி, தெலங்கானாவை போல தமிழகமும் கவிழும் என பாஜக மாநிலத் துணை தலைவர் கரு நாகராஜன் விமர்சித்துள்ளார்.
டாஸ்மாக் நிர்வாக ஊழலை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் பல்வேறு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
அந்த வகையில் எழும்பூர் ராஜரத்தினம் அரங்கத்தில் இருந்து ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்ற பாஜக மாநிலத் துணை தலைவர் கரு நாகராஜனை தடுத்தி நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல்துறையிடம் அனுமதி கடிதம் கொடுத்த பிறகு தான் போராட்டம் அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார். டாஸ்மாக் ஊழலை மறைக்கவே பாஜகவினர் திமுக முடக்க நினைப்பதாக குற்றம் சாட்டிய அவர், மதுபான ஊழலால் தமிழக அரசும் கவிழும் என விமர்சித்தார்.