சபாநாயகரை நீக்கக் கோரிய நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது குரல் மற்றும் டிவிசன் என 2 முறையில் நடந்த வாக்கெடுப்பு தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சபாநாயகர் அப்பாவுவை பதவி நீக்கக்கோரி தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் அதிமுக தீர்மானம் கொண்டு வந்தது.
இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்ட நிலையில், குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
குரல் வாக்கெடுப்பில் தீர்மானம் தோல்வியடைந்ததாகத் துணை சபாநாயகர் பிச்சாண்டி அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. டிவிஷன் முறையில் தீர்மானத்திற்கு ஆதரவாக 63 வாக்குகளும், எதிர்ப்பு தெரிவித்து 154 வாக்குகளும் விழுந்தன.
இதனால், சபாநாயகரை நீக்கக்கோரி அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.