சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இதில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இதில், வெஸ்ட் இண்டீஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் சிறப்பாக விளையாடி 74 ரன்கள் குவித்த அம்பாத்தி ராயுடு ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்நிலையில் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஒரு கோடி ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 50 லட்சம் ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டன.