கன்னியாகுமரி அருகே இளைஞர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை காவல்துறை கைது செய்தனர்.
லீபுரம் பாட்டுக்குளம் கரையோரத்தில் இரு தினங்களுக்கும் முன்பு பாதி எரிந்த நிலையில், 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை, 5 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், பாட்டுக்குளம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர் சிவகாசியைச் சேர்ந்த ஹரிஹரசுதன் என தெரியவந்தது. மேலும், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் ஹரிஹர சுதனை அடித்துக் கொன்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ஹரிஹர சுதனின் நண்பர்களான ராபர்ட்சிங், பெர்லின். கண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.