மகா கும்பமேளாவை முன்னெடுத்த உத்தரப்பிரதேச அரசுக்குப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் பேசிய அவர், பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
மகா கும்பமேளா உலக அரங்கில் இந்தியாவை எடுத்துக் காட்டியதாகப் பெருமிதம் கூறிய பிரதமர், இதன்மூலமாக அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மொரிஷியஸ் பயணத்தின்போது கங்கை நீரை எடுத்துச் சென்றதாக நெகிழ்ச்சியடைந்தார்.