மதுபான கொள்முதல் ஊழலில் சத்தீஸ்கர், தெலங்கானா, டெல்லி வரிசையில் அடுத்தது தமிழ்நாடு என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
முறைகேடுகள் செய்வதில் முன்னோடிகள் ஆயிற்றே (தி)ல்லு (மு)ல்லு (க)ழகத்தினர், டாஸ்மாக் மதுபான கொள்முதல் ஊழலில் ₹1000 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை முதற்கட்ட சோதனையில் தகவல் தெரிவித்திருக்கின்ற நிலையில், மதுபான கொள்முதல் ஊழல் குறித்து பேசுபவர்களில் ஒருவர் கூட டாஸ்மாக்கில் உண்மையிலேயே ஊழல் நடந்திருக்கிறதா என்று கேள்வி கேட்கவில்லை.
மாறாக வெறும் ₹1000 கோடிக்கு மேல் தான் ஊழல் நடந்திருக்கிறதா என்று தான் ஆச்சரியத்தில் கேள்வி கேட்கின்றனர். திமுகவின் கடந்த கால ஊழல் வரலாறு அப்படி, விஞ்ஞான ரீதியில் ஊழல் புரிந்தவர்கள் என்கிற அங்கீகாரம் பெற்றவர்கள் ஆயிற்றே! காற்றிலே 2G அலைவரிசை ஊழல்! நிலத்திலே பூமிக்கு அடியில் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் ஊழல்! என மனித குலத்தின் கற்பனைக்கு எட்டாத இடங்களில் எல்லாம் ஊழல் புரிந்தவர்கள் ஆயிற்றே, தமிழகமெங்கும் பள்ளி வகுப்பறை கட்டிடம் டெண்டர் தொடங்கி சென்னை மாநகராட்சி கழிப்பறை பராமரிப்பு டெண்டர் வரை அனைத்திலும் காசு பார்த்தவர்கள் ஆயிற்றே..!!
டாஸ்மாக் மதுபான ஊழல் 40 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்பது அனைவரின் கருத்து..!! சத்தீஸ்கர், தெலங்கானா, டெல்லி வரிசையில் அடுத்தது தமிழ்நாடு என எச். ராஜா தெரிவித்துள்ளார்.