ஹரியானா மாநிலம் ரேவாரி நகரில் அமைந்துள்ள ஏசி தொழிற்சாலை தீப்பற்றி எரிந்தது.
தகவலறிந்த தீயணைப்பு படையினர் 25 வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாகத் தகவல் வெளியானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.