மேக் இன் இந்தியா என்ற இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தோல்வி அடையவில்லை என மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் மத்திய அரசின் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் உற்பத்திக்கு பெரும் உத்வேகத்தை அளித்ததாகவும், இந்தியாவின் வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரம் சில வளர்ந்த நாடுகளை விட மிகச் சிறந்த அளவில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.