இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கடந்த மார்ச் 8-ஆம் தேதி லண்டனில் ‘வேலியண்ட்’ சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றம் செய்தார்.
இதன்மூலம், முழு அளவிலான மேற்கத்திய சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார். இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மேலும் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.