பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.
கடந்த 2013-ம் ஆண்டு ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் உயர்த்தப்படாததால், விலைவாசி உயர்வு அடிப்படையில் மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று போராட்டம் அறிவித்துள்ளனர்.
அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒன்றரை லட்சம் ஆட்டோக்கள் ஓடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனை போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் ஆட்டோக்கள் இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.