திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையின் சுவரில் பாஜக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினின் படம் ஒட்டப்பட்டது.
டாஸ்மாக் முறைகேடுக்கு எதிராக பாஜகவினர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாகவே பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
இதற்குக் கண்டனம் தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் சுவரில் முதலமைச்சர் ஸ்டாலினின் படம் ஒட்டப்படும் என அறிவித்தார்.
இதையடுத்து திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் உள்ள டாஸ்மாக் கடை சுவரில் முதலமைச்சரின் படத்தை பாஜக பெண் நிர்வாகி ஒருவர் ஒட்டினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.