மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண் ஊயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராமு என்பவரின் மனைவி தேவி, கர்பப்பையில் ஏற்பட்ட கட்டியை அகற்றுவதற்காக அண்மையில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஐசியு-வில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட அவர் வாந்தி எடுத்தபடி மயங்கியுள்ளார்.
தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களைச் சமாதானப்படுத்தி தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.