தமிழகத்தை அதிர வைத்த கொலை!
Oct 5, 2025, 02:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தை அதிர வைத்த கொலை!

Web Desk by Web Desk
Mar 20, 2025, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் ஒய்வு பெற்ற காவல் ஆய்வாளர் பட்டப்பகலில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு கோரி மனு அளித்த நிலையில் நடந்த இந்த கொலைக்கு காவல்துறையினரே பொறுப்பு என உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

”எனக்கு கொலை மிரட்டல்… ஒருத்தர், ரெண்டு பேரு இல்ல. 20, 30-க்கும் மேற்பட்ட ஒரு கும்பல் கொலை செய்ய சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியும் என்னை கொன்னுடுவாங்க….” இதெல்லாம் தமிழ்நாடு முதலைச்சரிடம் உயிர்பாதுகாப்பு கேட்டு ஒருவர் பேசி வெளியிட்ட வீடியோ. அவர் திருநெல்வேலி டவுன் தைக்கா தெருவைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்கிற பிஜிலி. அறுபது வயதான அவர், காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி, விருப்ப ஒய்வு பெற்றவர்.

நிச்சயம் பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பி இருந்தவரின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியே பரிசாக கிடைத்துள்ளது. டவுன் ஜாமியா தைக்கா தெருவில் உள்ள பள்ளி வாசலில் தொழுகை முடித்து மோட்டார் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஜாகீர் உசேனை, வழி மறித்த கும்பல், சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளது. இந்த கொலைக்கு காரணம் காவல்துறையின் மெத்தனம் மட்டுமல்ல, காவல் துறையினரே உடந்தையாகவும் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை உறவினர்கள் எழுப்பியுள்ளனர்.

கொலையான ஜாகீர் உசேன் வெளியிட்ட வீடியோவில், கொலை மிரட்டலுக்கு முக்கிய காரணம் நெல்லை டவுன் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர்தான். தவுபிக் கொடுத்த பொய்யான புகாரில் தம் மீதும், தமது மனைவி மீதும் பி.சி.ஆர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் ஜாகிர் உசேன் கொலைக்கு காவல்துறையில் உள்ள சில அதிகாரிகளே காரணம் என அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். வக்பு வாரியத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இடம் தொடர்பான முன்விரோதத்தில்தான் ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்ட 2 மாதத்தில் நெல்லையில் ஜாகீர் உசேன் கொல்லப்பட்டுள்ளார்.
கனிம வளக் கொள்ளைகளுக்கு எதிராக போராடிய ஜெகபர் அலி, லாரியை மோதி கொலை செய்தனர். எனினும், புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் கொள்ளை மட்டும் நின்றபாடில்லை. இதைத் தட்டிக் கேட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்று அச்சப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரைச் சேர்ந்த தமிழரசன் மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் (17ம் தேதி நம்மிடம் விஷூவல்ஸ், பைட் உள்ளது கொடுத்த புகாரே சாட்சியாக உள்ளது.

பெயரளவில் மட்டும் நடவடிக்கை எடுக்காமல், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இன்றைக்கு நெல்லையில் ஜாகீர் உசேன் கொல்லப்பட்டிருக்க மாட்டார் என்கிறார்கள் தன்னார்வலர்கள். மக்கள் நலன் சார்ந்து குரல் கொடுத்து வரும் சமூக செயற்பாட்டாளர்கள், கொல்லப்படுவது சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக விரோதிகளை இனியாவது இரும்புக் கரம் கொண்டு அடக்குவாரா முதலமைச்சர்…? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Tags: The murder that shocked Tamil Nadu!ஒய்வு பெற்ற காவல் ஆய்வாளர் பட்டப்பகலில் கொடூரமாகக் கொலைcm stalintamil janam tvTn newsதமிழகத்தை அதிர வைத்த கொலை!
ShareTweetSendShare
Previous Post

குடியரசுத் துணைத் தலைவருடன் எல். முருகன் சந்திப்பு!

Next Post

12-ஆம் வகுப்பு பள்ளி மாணவியை கடித்துக் குதறிய தெருநாய்!

Related News

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – ஒருநாள் போட்டிகளுக்கு சுப்மன் கில் கேப்டன்!

இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் – அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிதறி கிடந்த காலணிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies