ஜாகிர் உசேன் கொலையில் தொடர்புடையவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்தார்.
அப்போது, முதற்கட்ட விசாரணையில், ஜாகிர் உசேனுக்கும் கிருஷ்ணமூர்த்தி என்ற தெளபீக்கிற்கும் நிலப்பிரச்னை இருந்து வந்தது தெரியவந்துள்ளதாகக் கூறினார்.
ஜாகிர் உசேனுக்குக் கொலை மிரட்டல் இருந்தது தொடர்பாக ஏற்கனவே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதாகவும் தெரிவித்த முதலமைச்சர்,
கொலை வழக்கில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு அனைவரும் பாரபட்சமின்றி நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என உறுதியளித்தார்.
யாரும் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவதை அரசு அனுமதிக்காது எனவும், வழக்கில் தொடர்புடைய யாரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.