கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர், இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், கூலி உயர்வு கேட்டும் இந்த வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாகத் திருப்பூர், கோவை மாவட்டங்களில் 10 ஆயிரம் கூடங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் நிறுவப்பட்டுள்ளன.
இதனால் நாளொன்றுக்கு 35 கோடி ரூபாய் வரை உற்பத்தி பாதிக்கப்படும் எனவும், நேரடியாகவும் மறைமுகமாகவும் 3 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.