புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களுக்குக் காணொலி வாயிலாக அண்ணாமலை ஆறுதல் கூறினார்.
புதுக்கோட்டை அடுத்த சிப்காட் அருகே ரெங்கம்மாள் சத்திரத்தில் அரசு பேருந்தும் தனியார் பள்ளி பேருந்தும் மோதிய விபத்தில் 15க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பாஜக மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் நேரில் சென்று குழந்தைகளை நலம் விசாரித்தார்.
மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையைத் தொடர்புகொண்டு விபத்து சம்பவம் குறித்து எடுத்துரைத்தார்.
அப்போது, பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களைக் காணொலி வாயிலாகத் தொடர்புகொண்டு அண்ணாமலை ஆறுதல் கூறினார். மேலும், குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.