மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடித்த வன்முறையைத் தொடர்ந்து அங்கு 2வது நாளாக ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது.
குல்தாபாத்தில் உள்ள அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் வலியுறுத்தியது.
இதை வலியுறுத்தி நாக்பூரில் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், அது வன்முறையாக வெடித்தது. இதைத் தொடர்ந்து நாக்பூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது 2வது நாளாக அங்குள்ள சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.