கேரளாவிலிருந்து 20-க்கும் மேற்பட்ட தெரு நாய்களைத் தமிழக எல்லையில் விட முயன்றவர்களைப் பொதுமக்கள் பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
திருவனந்தபுரத்திலிருந்து வேனில் இருபதுக்கும் மேற்பட்ட தெரு நாய்களை ஏற்றி வந்த சிலர், அவற்றைக் கன்னியாகுமரி மாவட்டம் கட்டச்சலில் அவிழ்த்து விட்டுள்ளனர்.
இதைப் பார்த்த அப்பகுதியினர் அவிழ்த்து விடப்பட்ட தெரு நாய்களை அவர்களையே பிடிக்க வைத்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் அவர்களுக்கு 2 லட்ச ரூபாய் அபராதம் விதித்த நிலையில், காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக எல்லையில் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டிச் செல்வது தொடர் கதையான நிலையில், தற்போது தெரு நாய்களை விட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.