டாஸ்மாக் சோதனை : அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Oct 9, 2025, 08:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டாஸ்மாக் சோதனை : அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Mar 20, 2025, 02:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது தொடர்பாக மார்ச் 25ம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என அமலாக்கத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

அமலாக்கத்துறையின் சோதனை, அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என்று அறிவிக்கக் கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில் குமார் அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில், அரசின் அனுமதி பெறாமல் டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் முதல் காவலாளி வரை அனைவரிடம் விசாரணை நடத்தியதற்கான சிசிடிவி காட்சிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், டாஸ்மாக் அலுவலகம் சென்றதற்கான காரணங்களை அமலாக்கத்துறை தெரிவித்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டனர்.

மேலும், இரவில் ஏன் சோதனை நடத்தப்பட்டது எனவும் அமலாக்கத்துறைக்குக் கேள்வி எழுப்பினர். இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு தரப்பு, இரவில் சோதனை நடத்தப்படவில்லை என்றும், அனைவரும் வீடு திரும்பியதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், விசாரணை என்ற பெயரில் யாரும் துன்புறுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அமலாக்கத்துறை தனது அதிகாரத்தைச் செயல்படுத்திய விதத்தைத்தான் கேள்வி எழுப்புகிறோம் எனக் கூறிய நீதிபதிகள், அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், அதுவரை, அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என ஆணையிட்ட  நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மார்ச் 25ஆம் தேதி ஒத்திவைத்தனர்.

Tags: சென்னை உயர்நீதிமன்றம்அமலாக்கத்துறைTASMAC inspection: Madras High Court orders enforcement department!டாஸ்மாக் சோதனை
ShareTweetSendShare
Previous Post

வன்முறையை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது : சுனில் அம்பேகர்

Next Post

ஓய்வுப்பெற்ற எஸ்.ஐ. படுகொலை : காவல் உதவி ஆணையர் செந்தில்குமார் பணியிடை நீக்கம்!

Related News

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.85,790 கோடி அபராதம் : புற்றுநோய் ஏற்படுத்திய பவுடர் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

தொல்பொருள் ஆய்வுக்கு வலியுறுத்தல் : விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்!

வியாபாரிகள் போட்டா போட்டி : “தீபாவளி”க்கு டிசைன் டிசைனாய் துப்பாக்கிகள்!

“பட்டா கொடுத்தும் பலனில்லை” : திரும்பிப் பார்க்குமா திமுக அரசு?

ஜாதி பெயர் மாற்றம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கருணாநிதி பெயர் சூட்டும் அவலம்- எல் முருகன்

சிறப்பு புலனாய்வு குழு மனுவிற்கு தவெக தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய விமானப்படை விழாவின் இரவு விருந்தின் உணவு பட்டியல் வைரல்!

அணியில் இடமில்லை – மவுனம் கலைத்த முகமது ஷமி

மதுரை : கிரிக்கெட் வீரர் தோனிக்கு உற்சாக வரவேற்பு!

Perplexityயின் Comet AI-ன் செயலால் எக்ஸ் தளத்தில் வெடித்த விவாதம்!

வசூலை வாரி குவிக்கும் காந்தாரா Chapter 1!

ஜப்பான் : சாலையில் நடந்து சென்ற பெண்ணை தாக்க முயன்ற கரடி!

திருப்பத்தூர் : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள்!

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு – பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஜிப்லைன் மூலம் சென்று மருத்துவருக்கு பாராட்டு!

ஒரு வார பயணமாக இந்தியா வந்தடைந்தார் தாலிபான் அமைச்சர்!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies