தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 2 விவசாயிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மலையடிவாரத்தில் கருப்பையா, மணி ஆகிய விவசாயிகள் பிப்ரவரி 25-ம் தேதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
ஆரம்பத்தில் வன விலங்கு தாக்கி உயிரிழந்திருக்கலாம் என போலீசார் கருதிய நிலையில், கருப்பையாவின் மைத்துனரான கருப்பசாமி என்பவர் கூலிப்படையை ஏவி இருவரையும் கொலை செய்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாகக் கருப்பையா உள்பட இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.