திருப்பரங்குன்றம் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரைக் காவலர் ஒருவர் சாதுரியமாகச் செயல்பட்டு காப்பாற்றினார்.
மதுரை மாநகரில் இருந்து திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் செல்லக்கூடிய மேம்பாலத்தில் இளைஞர் ஒருவர் ஹெல்மெட் அணிந்தவாறு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, காவலர் ஒருவர் ஓடிச்சென்று இளைஞரைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றினார்.
இதனைத் தொடர்ந்து இளைஞரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கடன் பிரச்சனை காரணமாக இளைஞர் தற்கொலைக்கு முயன்று தெரியவந்தது. இதனை அடுத்து, இளைஞருக்கு அறிவுரை கூறி போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.