செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் மும்மொழிக்கான கையெழுத்து இயக்கத்தை நாகர்கோவில் எம்.எல்.ஏ. காந்தி தொடங்கி வைத்தார்.
முன்னதாக தலசயன பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், மும்மொழிக்கு ஆதரவான பதாகையில் கையெழுத்திட்டு இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து பொதுமக்களும் அவருக்கு ஆதரவாகக் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் பாஜக மாநில மகளிரணி பொறுப்பாளர் பாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.