நாட்டை படையெடுத்தவரைப் போற்றுவது தேசத் துரோக செயல் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் உள்ள முகலாய மன்னரான ஒளரங்கசீப்பின் கல்லறையை அகற்றும் விவகாரத்தில் இருதரப்பினரிடையே வன்முறை வெடித்தது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், நாட்டை படையெடுத்தவரைப் போற்றும் எந்தவொரு துரோகியையும் சுதந்திர இந்தியா ஏற்றுக் கொள்ளாது எனத் தெரிவித்துள்ளார்.