நெல்லையில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் கொலை வழக்கில் தொடர்புடையை பெண்ணை பிடிக் தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.
நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்ஐ ஜாகீர் உசேன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நெல்லை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அக்பர்ஷா, கார்த்திக் ஆகியோர் சரண் அடைந்தனர்.
வழக்கின் முக்கிய குற்றவாளியான முகமது தவுபிக்கை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர்.
இந்நிலையில் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான முகமது தவுபிக்கின் மனைவி நூருன்னிஷா, கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் பதுங்கி இருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கே விரைந்துள்ளனர்.