சாதிவாரி கணக்கெடுப்பு - பேரவையில் காரசார விவாதம்!
Sep 13, 2026, 02:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாதிவாரி கணக்கெடுப்பு – பேரவையில் காரசார விவாதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 21, 2025, 06:31 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

பேரவையில் உரையாற்றிய பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சமூக நீதியின் ஒரு அங்கம் எனவும், தெலங்கானாவில் கணக்கெடுப்பு நடத்தியதன் மூலம் மாநில அரசுக்கு தடையில்லை என்பது தெளிவாகிறது என்றும் சுட்டிக்காட்டினார். படிப்பு, வேலை வாய்ப்பில் சாதி பார்க்கும் போது சாதியை எப்படி ஒழிக்க முடியும்? எனவும் ஜி.கே.மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் மெய்யநாதன், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளதாக கூறினார். மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.

அமைச்சரின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன், மாநில அரசுகளே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியும் எனக் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இணைந்து பேசி முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகக் கூறினார். முதலில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்கள் எனவும், பின்னர் நீதிமன்றம் தடை விதித்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து உரையாற்றிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது மத்திய அரசின் பணி எனக் குறிப்பிட்டார். எனவே சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்துவதே சரியாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.

மீண்டும் உரையாற்றிய பாமக உறுப்பினர் ஜி.கே.மணி, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் இருந்தால் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் கேள்வி வந்தால் என்ன செய்வது? என வினவினார். அதற்காகவாவது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Tags: Minister Meiyanathanvelmurugan mlatn Legislative AssemblyPMK MLA G.K. Manicaste-based census. debate
Share
Tweet
SendShare
Previous Post

ஜாகிர் உசேன் கொலை வழக்கு – தலைமறைவான பெண்ணை பிடிக்க கேரளா விரைந்த தனிப்படை!

Next Post

இடஒதுக்கீட்டை கொடுப்பதற்கு இருக்கும் அதிகாரம், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு இல்லையா? – சீமான் கேள்வி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies