பெங்களூருவில் ஆர்எஸ்எஸ்-ன் அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டத்தை அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தொடங்கி வைத்தார்.
பெங்களூரு சொன்னேனஹல்லியில் உள்ள ஜன சேவா வித்யா கேந்திரத்தில், இன்று முதல் 23ம் தேதி வரை ஆர்எஸ்எஸ்-ன் அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டம் நடைபெறவுள்ளது.
கூட்டத்தை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். முன்னதாக, விழா மேடைக்கு வந்த அவர், பாரத மாதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே முன்னிலையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரத்து 450 பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். 3 நாட்கள் நடைபெறும் கூட்டத்தில், ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.