காரைக்குடி அருகே ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த ரவுடி மனோ மீது கஞ்சா செடி வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கையெடுத்துப் போட நண்பர்களுடன் சென்றுள்ளார்.
காரைக்குடி 100 அடி சாலையில் சென்றபோது காரில் வந்த மர்ம கும்பல் ரவுடியை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக்கொன்றது.
தாக்குதலில் காயமடைந்த மனோவின் நண்பர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறை, கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.