சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சர்ச்சை கருத்து தெரிவித்த விசிக உறுப்பினருக்கு பாஜக உறுப்பினர் உமா ஆனந்த் பதிலடி கொடுத்தார்.
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் கோபிநாத், என்யூஎம்எல் துறையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களைப் பணி நிரந்திரம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
மேலும், இத்தகைய பணியை எந்த விதமான மேல்தட்டு மக்களோ, அக்ரஹாரத்தில் இருந்தோ செய்ய முடியாது எனவும் கூறினார். இதற்குப் பதிலளித்த பாஜக உறுப்பினர் உமா ஆனந்த், தனிப்பட்ட தாக்குதல் கூடாது என்றும், பதிலுக்குத் தாமும் பேசுவேன் எனவும் தெரிவித்தார்.
மேலும், அக்ரஹாரத்தை பார்த்து வயிற்றெரிச்சல் ஏற்பட்டால் ஜெலுசில் (Gelusil) சாப்பிடுங்கள் என்றும் கூறினார். இதனால், மாமன்ற கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.