சென்னை விருகம்பாக்கத்தில் முதியவர் என்றும் பாராமல் ஏடிஎம் காவலாளி மீது தாக்குதல் நடத்திய இருவரை காவல்துறை கைது செய்தனர்.
விருகம்பாக்கத்தில் உள்ள ஏடிஎம்மில் ரங்கநாதன் என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அங்குப் பணம் எடுக்க வந்த இரண்டு இளைஞர்கள், ஏடிஎம் வாசலிலேயே தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.
அப்போது காவலாளி ரங்கநாதன் இருசக்கர வாகனத்தை பார்க்கிங்கிள் நிறுத்தும்படி கூறியுள்ளார். ஆனால் இளைஞர்கள் வாசலிலேயே நிறுத்தி விட்டு பணம் எடுக்கச் சென்றுள்ளனர். இதையடுத்து காவலாளி ரங்கநாதன் இருசக்கர வாகனத்தை பார்க்கிங்கிள் நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் காவலாளி ரங்கநாதனை முதியவர் என்றும் பாராமல் கடுமையாகத் தாக்கியுள்ளார். இது குறித்து ரங்கநாதன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை இருவரையும் கைது செய்தனர்.