சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான ரெட்டேரியை தூர்வாராம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட லட்சுமி புரம் பகுதியில் உள்ள ரெட்டேரி, சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக விளங்குகிறது.
சுமார் 500 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ள இந்த ஏரியை 43 கோடி ரூபாய் செலவில் ஆழப்படுத்தவும், கரைகளைப் பலப்படுத்தவும், படகு சவாரி மேற்கொள்வதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஏரியைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
















