உத்தரப் பிரதேசத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் தனது ஆட்டோவில் 14 பள்ளி குழந்தைகளை அடைத்து அழைத்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஜான்சி BKD சந்திப்பு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு ஆட்டோவில் பல பள்ளி குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுவதைக் கண்டு, அந்த வாகனத்தைத் தடுத்து நிறுத்திச் சோதனையிட்டனர்.
அப்போது ஆட்டோவுக்குள் கிட்டத்தட்ட 14 குழந்தைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், ஓட்டுநருக்கு அபராதம் விதித்தனர்