கர்நாடகாவில் 48 அரசியல் தலைவர்கள் ஹனி டிராப் வலையில் சிக்கியுள்ளதாகப் பேசி அம்மாநில அமைச்சர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சட்டமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தின்போது பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.என்.ராஜண்ணா, தனக்கு ஹனி டிராப் வலை வீசப்பட்டுத் தோல்வியடைந்ததாகவும், கிட்டத்தட்ட 48 அரசியல் தலைவர்கள் ஹனி டிராப் வலைக்கு இலக்காகி இருப்பதாகவும் தெரிவித்தார்.
அவரது குற்றச்சாட்டைத் தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.