தெலங்கானாவில் வரும் மே மாதம் உலக அழகிப்போட்டி நடக்கவுள்ளதாக அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், 72-வது உலக அழகி போட்டி வரும் மே 10-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை, தெலங்கானாவின் முக்கியத்துவம் வாய்ந்த 10 நகரங்களில் நடைபெறும் எனக் கூறினார்.
தெலங்கானா சுற்றுலாத்துறையும், மிஸ் வேல்டு நிறுவனமும் அதற்கான செலவுகளைச் சரிசமமாகப் பகிர்ந்துகொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டார்.