பயங்கரவாதத்தை மத்திய அரசு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சூளுரைத்தார்.
மாநிலங்களவையில் இதுதொடர்பான விவாதத்தின் மீது பேசிய அவர், மத்தியில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் பயங்கரவாதத்துக்கு உடனுக்குடன் முடிவு கட்டப்படுவதாகக் கூறினார். பாஜக ஆட்சியில் உரி மற்றும் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைச் சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சர் அமித்ஷா, வெறும் 10 நாளில் பாகிஸ்தானுக்குள்ளேயே நுழைந்து இந்தியா சர்ஜிகல் ஸ்டிரைக் மூலம் தக்க பதிலடி கொடுத்ததாகப் பெருமிதம் தெரிவித்தார்.
இதேபோல அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் நக்ஸல் பயங்கரவாதத்துக்கும் முடிவு கட்டப்படும் என அவர் உறுதியளித்தார்.