நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சியில் ஒப்பந்தப் பணிகளுக்கு கமிஷன் கேட்ட நகர் மன்ற தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லியாளம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையிலான பணிகளைக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் மேற்கொண்டு வந்தார்.
அவரிடம் நகர்மன்ற தலைவர் சிவகாமி மற்றும் திமுக கவுன்சிலர்கள் 17 சதவீதம் கமிஷன் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒப்பந்தம் ரத்தானதால் ஒப்பந்ததாரர், நகர்மன்ற தலைவரைச் சாதி ரீதியாகத் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் ஒப்பந்ததாரர்கள் நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அதேபோல் கமிஷன் கேட்டதாக ஒப்பந்ததாரர் அளித்த புகாரின் பேரில் நகர்மன்ற தலைவர் சிவகாமி மற்றும் அவரது உதவியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.