தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு, ஊழலை மறைப்பதற்கான இன்று திமுக கூட்டம் நடத்துவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் இல்லம் முன்பு கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்த கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தின் மூலம் தமிழக முதலவருக்கு கண்டனத்தை பதிவு செய்து கொள்வதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் தீர்க்கப்படாத பிரச்சனைகள் உள்ளதாகவும், தமிழகத்தை காப்பாற்ற போவது தாமரைக்கொடி தான் என்றும் கூறினார்.
அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த அரசு எல்லா விதத்திலும் தோல்விடயுடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மத்திய அமைச்சர் அமிஷா தொகுதி மறு வரையறையினால் தமிழ்நாடு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என தெரிவித்துள்ளதாகவும், தமிழக முதல்வர் தோல்வியை மறைப்பதற்காக இந்த கூட்டத்தை கூட்டியுள்ளதாகவும் கூறினார். தமிழக மக்களின் நலனைக் காப்பதற்காக இந்த கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறுவதாகவும் தமிழிசை கூறினார்.
காவிரி, மேகதாது, முல்லைப் பெரியாறு விவகாரத்திற்கு இதுபோன்ற கூட்டம் நடத்தப்பட்டதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.