மதுபான ஊழலில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் சிறை செல்ல செந்தில் பாலாஜி மூல காரணமாக இருப்பார் என முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் நகரில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வைகை செல்வன், செந்தில் பாலாஜிக்கு நன்றி சொல்ல வேண்டும் எனவும், மதுபான ஊழலில் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் சிறை செல்ல அவர்தான் காரணமாக இருப்பார் எனவும் கூறினார்.