கடலூர் அருகே இளம்பெண்ணின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் மா.கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் மகள் பூமிக்கா, அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பூமிக்கா கருவுற்றதாகத் தெரிகிறது.
இதையடுத்து, தம்மைத் திருமணம் செய்து கொள்ளுமாறு ஸ்டீபனிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி ஸ்டீபன் கால தாமதம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலிலிருந்த பூமிக்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, இளம்பெண்ணின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.