வெயிலின் தாக்கத்தால் சென்னை புழல் ஏரியின் நீர்மட்டம் குறையத் தொடங்கியுள்ளது.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாகப் புழல் ஏரி விளங்குகிறது. 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரி சுமார் 18 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.
மேலும் இந்த ஏரி முக்கிய சுற்றுலா தளமாகவும் விளங்கி வருகிறது. தற்போது வெயிலின் தாக்கத்தால் ஏரியின் நீர்மட்டம் குறையத் தொடங்கியுள்ளது.