விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி அருகே பள்ளி மாணவர்களுக்குக் கஞ்சா விற்பனை செய்த இருவரை காவல்துறை கைது செய்தனர்.
மல்லாங்கிணறு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான இரண்டு நபர்களைப் பிடித்து விசாரித்தார். அவர்களிடம் நடத்திய சோதனையில், சாக்லேட் பேப்பரில் மறைத்து கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை காவல்துறை பறிமுதல் செய்தனர். கஞ்சா வைத்திருந்த வீரமணிகண்டன், முத்துராமன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.