நெல்லை மாவட்டம் அத்திமேடு பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண், தங்களை குடும்பத்தோடு கருணைக்கொலை செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
மகாலட்சுமியின் கணவருக்கு விபத்து ஒன்றினால் கை, கால்கள் செயலிழந்த நிலையில், அவரது இரு சகோதரர்கள் தொழுநோயாலும், நீரழிவு நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தொழுநோயால் பாதிக்கப்பட்ட மகாலட்சுமியின் சகோதரருக்கு, மன நலமும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைக் காரணம் காட்டி, வீட்டை காலி செய்ய வேண்டுமென உரிமையாளர் நெருக்கடி கொடுப்பதாகவும், தனது சகோதரரைக் காப்பகத்தில் வைத்துக் கவனிக்க அரசு உதவி புரிய வேண்டும் எனவும் மகாலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.