கர்நாடகாவில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும் சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, முதலமைச்சரின் ஊதியம் 75 ஆயிரம் ரூபாயிலிருந்து, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாகவும், அமைச்சர்களின் ஊதியம் 60 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சத்து 25
ஆயிரம் ரூபாயாகவும், எம்எல்ஏக்களின் ஊதியம் 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 80 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
நிதிப்பற்றாக்குறை உள்ளதாகக் கூறி வரும் மாநில அரசு, கூடுதல் நிதிச்சுமை தரும் இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது, விமர்சனங்களைப் பெற்று வருகிறது.