பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 5-ம் தேதி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு அதிபர் அனுரா திசநாயகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய அவர், முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காகப் பிரதமர் மோடி வருகை தரவுள்ளதாகவும், அவரது வருகையின்போது திரிகோணமலையில் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.